Enable Javscript for better performance
அகதிகள் முகாமில் வசிப்போர் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது: கடலோரக் காவல் படை- Dinamani

சுடச்சுட

    

    அகதிகள் முகாமில் வசிப்போர் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது: கடலோரக் காவல் படை

    By DIN  |   Published on : 08th October 2016 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் முறையான அனுமதியின்றி வெளி மாநிலங்களுக்கோ, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும் என கடலோரக் காவல்படை ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.
    விருத்தாசலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முகாமில் வெள்ளிக்கிழமை கடலோரக் காவல்படை ஆய்வாளர் சேகர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
    முகாம்களில் தங்கியிருப்பவர்கள் உரிய அனுமதியின்றி வெளி மாநிலங்களுக்கோ, வெளி மாவட்டங்களுக்கோ செல்வதை கைவிட வேண்டும். குறிப்பாக முறையான அனுமதி பெறாமல் ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்வதை கைவிட வேண்டும். அந்த நாட்டுக்குச் செல்வதற்கான கடல் பயணத்தின்போது படகுகள் நடுக் கடலில் கவிழ்ந்து அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் 1093 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். அந்நிய நபர்கள் முகாம்களில் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது. யாரேனும் அப்படி வந்தால் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். முகாம்களில் பதிவு இல்லாதவர்கள் தங்கக் கூடாது என்றார்.
    இதையடுத்து, முகாம் வாசிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
    தங்களுக்கு ஓட்டுநர் உரிமம், ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மின்சார பிரச்னைகள் அதிகம் உள்ளன என்றனர்.
    இது தொடர்பாக கோட்டாட்சியரிடம் எடுத்துரைக்கப்படும் என ஆய்வாளர் சேகர் கூறினார். நிகழ்ச்சியில், முகாம் தலைவர் கந்தையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai