Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை.யில் தாவர பூச்சிக்கொல்லி ஆராய்ச்சி பயிற்சிப் பட்டறை- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.யில் தாவர பூச்சிக்கொல்லி ஆராய்ச்சி பயிற்சிப் பட்டறை

    By DIN  |   Published on : 08th October 2016 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தின் பூச்சியியல் துறையில், தாவர பூச்சிக்கொல்லி ஆராய்ச்சி பயிற்சிப் பட்டறை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 35 ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் பயிற்சியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், இயற்கை முறை வேளாண்மையின் பாரம்பரியம் குறித்தும், தற்போது அதை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
    மேலும் அவரது ஆராய்ச்சியின் மூலம் தேயிலை செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை பூஞ்சாணக் கொல்லி குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
    பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் பங்கேற்று, பூச்சியியல் துறை மற்றும் பயிற்சி இயக்குநர்களை பாராட்டி பேசினார். விழாவுக்கு தலைமை வகித்த வேளாண்புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன், தாவர பூச்சிக் கொல்லிகளின் பயன்கள் குறித்தும், அதில் பூச்சியியல் துறையின் பங்கு பற்றியும் பேசினார். சென்னை பல்கலைக்கழக தாவரவியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் என்.ராமன் சிறப்புரையாற்றினார்.
    முன்னதாக, பூச்சியியல் துறைத் தலைவர் வி.செல்வநாராயணன் வரவேற்றார். பயிற்சி இயக்குநர் எஸ்.அறிவுடைநம்பி பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். துணை இயக்குநர் டி.செல்வமுத்துக்குமரன் நன்றி கூறினார்.
    நிகழ்ச்சியில் பூச்சியியல் துறை முன்னாள் தலைவர்கள், முனைவர் எம்.பாலசுப்ரமணியம், முனைவர் பி.பாஸ்கரன், கல்வி திட்ட இயக்குநர் கே.மணிவண்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai