Enable Javscript for better performance
அரசுப் பள்ளி விடுதியில் எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரத்தில் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு தரத்தினை பரிசோதித்தார். மேலும், மாணவர்களிடம் உணவு வகைகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்றும், உணவின் தரத்தினையும் எம்எல்ஏ கேட்டறிந்தார். ஆண்கள் விடுதியில் உள்ள அறைகளை பார்வையிட்ட அவர், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாணவர்கள் குறிப்பிட்ட குறைகளை உடனடியாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். மேலும், விடுதி காப்பாளர் பழனிவேல், உதவி தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
    ஆய்வின் போது சிதம்பரம் நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், ஒன்றியச் செயலர் அசோகன், மாவட்டக் கவுன்சிலர் இளநாங்கூர் கர்ணா, நிர்வாகிகள் ராசாங்கம், ஆர்.முருகையன், வித்தியாதித்தன், சொக்கநாதன், செராம்பேட்டை அருள், முத்துராமன், கார்த்திகேயன், ஆர்.வி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai