Enable Javscript for better performance
கடலூரில் அரசு முதியோர் இல்லம்: பென்சனர்கள் கூட்டமைப்பு கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் அரசு முதியோர் இல்லம்: பென்சனர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் அரசு முதியோர் இல்லம் தொடங்கப்பட வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
    கூட்டமைப்பு சார்பில், உலக முதியோர் தினக் கூட்டம் மாவட்டத் தலைவர் ச.சிவராமன் தலைமையில் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலர் ரா.தீனதயாளன் வரவேற்றார். முதியோர் பாதுகாப்பு குறித்து மருத்துவர் தே.காரல் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் சி.ராமசாமி, நிர்வாகிகள் கோ.தண்டபாணி, எம்.கலியபெருமாள், சி.பக்கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில், சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது போல், தமிழகம் முழுவதும் வழங்க வேண்டும். கடலூரில் அரசு முதியோர் இல்லம் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai