Enable Javscript for better performance
கல்லூரி மாணவிகள் ரத்ததானம்- Dinamani

சுடச்சுட

    

    வடலூர் ஏரீஸ் மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரி, நெய்வேலி ரத்தக் கொடையாளர் சங்கம் மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான சிறப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரி முதல்வர் ச.தியாகராசன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திருநாவுக்கரசு, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறைத் தலைவர் மா.சின்னப்பொண்ணு வரவேற்றார். கல்லூரித் தலைவர் சி.டி.அறிவழகன் வாழ்த்துரை வழங்கினார்.
    என்எல்சி முதன்மைப் பொது மேலாளர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். ரத்தக் கொடையாளர் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, செயலர் ஜி.கலியபெருமாள், வணிகவியல் துறைத் தலைவர் சு.ஜானகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முகாமில், 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்ததானம் செய்தனர். ரத்தக் கொடையாளர் சங்கப் பொருளர் சந்துரு நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai