Enable Javscript for better performance
கூடுதல் ஓய்வூதியம்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கூடுதல் ஓய்வூதியம்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியர்களில் 70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    சங்கக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமை வகித்துப் பேசினார். துணைத் தலைவர் த.சண்முகசுந்தரம் மாத அறிக்கையும், பொருளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர்.
    கூட்டத்தில், பண்ருட்டியில் வரும் 16ஆம் தேதி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகள் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்க வேண்டும்.
    ஓய்வூதியர் இறப்பின்போது குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக ஈமச் சடங்கிற்கு வழங்குதல், 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பண்டிகைக்கால முன்பணம், மருத்துப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மேலும், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் டி.மாரியப்பன் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்த தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
    நிர்வாகிகள் எஸ்.ஏ.தாஸ், ஆர்.சஞ்சீவிராயர், ஆர்.திருநாராயணன், பேட்ரிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நிர்வாகிகள் எம்.முத்துசாமி வரவேற்க, முத்துவேல் நன்றி
    கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai