Enable Javscript for better performance
சிறந்த இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சிறந்த இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெலன்ராணி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர் மன்ற விருதுகளை வழங்க உள்ளது.
    இதில் சிறந்த மன்றமாக தேர்வு பெறும் அமைப்புக்கு ரொக்கமாக ரூ.25 ஆயிரம் மற்றும் சான்று வழங்கப்படும். விருதுகள் சங்க விதிகளின்படி பதிவு பெற்று, நேரு இளையோர் மையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இளைஞர், மகளிர் மன்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
    விண்ணப்பிக்க விரும்புவோர் கடலூர் புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நேரு இளையோர் மைய, மாவட்ட ஒரு ங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
    விண்ணப்பத்துடன், தாங்களது மன்றம் மூலமாக செய்த பணிகளுக்கு தகுந்த ஆதாரத்துடன் அக்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விவரங்களுக்கு 04142-293822 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai