Enable Javscript for better performance
செயற்கை பல் பொருத்தும் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், இலவச செயற்கை பல் பொருத்தும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
    உலக முதியோர் தினம் மற்றும் உலக செயற்கை பல் பொருத்தும் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமில்,
    25-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு ஒரே நாளில் செயற்கை பல் பொருத்தப்பட்டது. முகாமை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம், மருத்துவ மேற்பார்வையாளர் பாஸ்கர், புல முதல்வர் வி.கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தலைமை பேராசிரியர் சுமா கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.
    தலைமை பேராசிரியர் தங்கவேலு சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து பேசினார். விழாவில் டாக்டர் பி.எஸ்.மனோகரன், டாக்டர் ஷெரின்கலாம் மற்றும் டாக்டர் யோகானந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் திரையிடப்பட்டது.
    விழாவின் தொடர்ச்சியாக சிதம்பரம் மாரியப்பாநகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
    அதன் பின்னர் 70-ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செயற்கை பல் பொருத்துவதற்கான (டெண்டல் இம்ப்ளாண்ட்) பயிற்சி அளிக்கப்பட்டது. டாக்டர் ஆர்.கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

    மார்பகப் புற்றுநோய் மருத்துவ முகாம்

    அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தோட்டப்பட்டு கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய் தொடர்பான பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
    இதில், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, கருப்பை புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களிலும் இம்மாதம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
    புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பூரண குணமடையலாம். எனவே பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கிருஷ்ணா மருத்துவமனை குழும இயக்குநர் மு.கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai