Enable Javscript for better performance
மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி வீட்டுக்குள் புகுந்து விபத்து- Dinamani

சுடச்சுட

    

    மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி வீட்டுக்குள் புகுந்து விபத்து

    By DIN  |   Published on : 08th October 2016 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி சாலையோர வீட்டுக்குள் புகுந்தது. இதில் சுமார் 20 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் வெடித்து தீப்பிடித்து சேதமடைந்தன.
    திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடியிலிருந்து கடலூருக்கு சுமார் ஆயிரம் மது பாட்டில்கள் பெட்டிகளுடன் லாரி வந்து கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம், கீழப்படுகை ஆற்றங்கரையைச் சேர்ந்த ராஜசேகர் (22) லாரியை ஓட்டினார்.
    சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் தீர்த்தாம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
    இதில் மின் கம்பம் சாய்ந்தது. பின்னர், அந்த லாரி அந்தப் பகுதியில் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    லாரி விபத்துக்குள்ளானபோது சுமார் 20 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் வெடித்து தீப்பிடித்தன. தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதமுற்ற மது பாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். விபத்தில் விஜயா என்பவரின் வீட்டின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai