Enable Javscript for better performance
ராகவேந்திரர் அவதார மடத்தில் நவராத்திரி மஹோற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே புவனகிரியில் அவதரித்த ஸ்ரீராகவேந்திரரின் இல்லத்தில் அமைந்துள்ள பிருந்தாவன மடத்தில் நவராத்திரி மஹோற்சவம் நடைபெற்று வருகிறது.
    விழாவை முன்னிட்டு கொலு வைத்து அகண்ட தீபம் ஏற்றி 10 நாள்களும் தொடர்ந்து எரியும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    தினமும் ஸ்ரீராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    மாலையில் பாட்டு, சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தினமும் இரவு 8.30 மணியளவில் சுவஷ்டி பூஜையும், கொலு பூஜையும் நடைபெறுகிறது.
    விழா ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவர் ஆர்.ராமநாதன், செயலர் ஜி.உதயசூரியன், பொருளர் கே.கதிர்வேலு, ரகு ஆச்சாரியார் ஆகியோர் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai