Enable Javscript for better performance
வட்டாட்சியர் அலுவலகத்தில் மாடுகளால் இடையூறு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாடுகளால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
    கடலூர் கடற்கரை சாலையில், கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் அலுவலகம், இ-சேவை மையம், கருவூலம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்துக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக கடலூர் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தினர் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
    அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டப்பட்ட பகுதியில் மாடுகள் தஞ்சமடைகின்றன. இங்கு பெரும்பாலான நேரங்களில் 5-க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருப்பதை காண முடிகிறது.
    மேலும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருவோரில் பெரும்பாலோர் வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தாமல், அலுவலகத்தில் ஆங்காங்கே ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
    எனவே, வட்டாட்சியர் அலுவலகத்தில் மாடுகளை அப்புறப்படுத்தி சுத்தமாகப் பராமரிக்கவும், வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai