Enable Javscript for better performance
அகதிகள் முகாம்:  மாணவி மாயம்- Dinamani

சுடச்சுட

    

    அகதிகள் முகாமைச் சேர்ந்த கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     விருத்தாசலம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி ஒருவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசுக் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வியாழக்கிழமை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற அந்த மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
     இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விருத்தாசலம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
     அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை யாரேனும் கடத்திச் சென்றுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai