Enable Javscript for better performance
இந்து மக்கள் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக்.16) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலா ராம.ரவிக்குமார் (படம்) தெரிவித்துள்ளார்.
     சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
     எங்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆயுதபூஜையை முன்னிட்டு வீட்டில் பயிற்சி துப்பாக்கி வைத்திருந்ததாக போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (அக்.16) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
     ஐஎஸ் ஆதரவு தளம் தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என கூறிவந்தோம்.
     இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் மத்திய உளவுத் துறையினர் தமிழகம், கேரளத்தில் அந்த அமைப்பின் ஆதரவாளர்களை கைது செய்துள்ளனர். பொதுசிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தினர் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
     காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு பாஜக அரசு துரோகம் செய்துள்ளது. ராமலீலா விழாவுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் ராவணன் லீலா நடத்தி ராமர் உருவத்தை எரித்து வருவதை கண்டிக்கிறோம் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai