Enable Javscript for better performance
இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     கடலூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாபு மகன் விஜயசாரதி (30). பட்டதாரியான இவர், தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருமாறு முதுநகர் அருகே உள்ள செல்லங்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை அணுகினாராம். இதற்காக ரூ.3 லட்சத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் 2 தவணையாக ரமேஷுக்கு அளித்தாராம். இப்பணத்தை விஜயசாரதி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரமேஷின் மனைவி சிவப்பிரியா கணக்குக்கு மாற்றம் செய்துள்ளார். எனினும் வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பித் தருமாறு விஜயசாரதி கேட்டு வந்துள்ளார். ஆனால் தம்பதியினர் பணத்தை திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai