Enable Javscript for better performance
கடலூரில் வீணாகும் குடிநீர்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் நகராட்சிக்குள்பட்ட தேவனாம்பட்டினம், வண்ணாரப்பாளையம், வன்னியர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வெள்ளிக்கடற்கரை சாலை வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
     இதில், நகராட்சி அலுவலகத்திலிருந்து சுமார் 500மீ தொலைவில் தனியார் ஹோட்டல் அருகே உள்ள குழாயில் வால்வுப் பகுதி பழுதடைந்து குடிநீர் கடந்த ஒரு மாதமாக வெளியேறி வருகிறது.
     இது தொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில், குடிநீர்க் குழாயில் சிறிய அளவிலான பழுதே உள்ளது. இதனை சரிசெய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்போது இந்தக் குழாயிலிருந்து அழுத்தம் காரணமாக தண்ணீர் பீறிட்டு காலை முதல் மாலை வரை வீணாகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai