Enable Javscript for better performance
சரநாராயணப் பெருமாள் கோயிலில் நாளை ஏக தின ப்ரமோத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    சரநாராயணப் பெருமாள் கோயிலில் நாளை ஏக தின ப்ரமோத்ஸவம்

    By நெய்வேலி,  |   Published on : 15th October 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி திருவதிகையில் உள்ள ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில் ஏகதின ப்ரமோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
     அதன்படி, அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம், 4.30-க்கு தோமால சேவை, 6 முதல் 7.15-க்குள் கொடியேற்றம், 8 மணிக்கு அம்ச வாகன சேவை, 9 மணிக்கு சிம்ம வாகனம், 10 மணிக்கு அனுமந்த வாகனம், 11 மணிக்கு சேஷ வாகனம், நண்பகல் 12 மணிக்கு கருட வாகனம், 3 மணிக்கு யானை வாகனம், மாலை 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவையும், 6 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், இரவு 7 மணிக்கு தீர்த்தவாரியும், 7.30 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.
     இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் பா.ஜெயசித்ரா, செயல் அலுவலர் ஜெ.ராஜாசரவணக்குமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai