Enable Javscript for better performance
சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

    By சிதம்பரம்,  |   Published on : 15th October 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு புரட்டாசி மாத மகாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
     உலக நன்மையை கருதியும், புரட்டாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டும் இந்தக் கோயிலில் கடந்த 3ஆம் தேதி அதிருத்ர மகா ஜப பாராயணம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை மாலை மகா ஜப பாராயணம் முடிவுற்று அதிருத்ர மகாயாகம் நடைபெற்றது.
     முன்னதாக, அதிகாலை 4 மணியளவில் கோயில் திறக்கப்பட்டு, சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதையடுத்து, ஆயிரங்கால் மண்டபம் முன் பிரம்மாண்ட யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை லட்சார்ச்சனையும், 100 பேர் பங்கேற்கும் அதிருத்ர மகாயாகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர், யாகசாலையிலிருந்து 1,016 கடங்கள் புறப்பட்டு சித்சபை முன் உள்ள கனகசபைக்கு சென்ற பின்னர் மகாபிஷேகம் நடைபெற்றது.
     இதில், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் இரவு 11 மணிக்கு முடிவுற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
     அதிருத்ர மகாயாகம், மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai