Enable Javscript for better performance
நெய்வேலி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

    By கடலூர்,  |   Published on : 15th October 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
     இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் வி.முத்துவேல், நகரச் செயலர் எஸ். திருஅரசு, சிஐடியு பொதுச் செயலர் டி.ஜெயராமன், திமுக நகரச் செயலர் வி.பார்த்தசாரதி, பாமக நகரச் செயலர் பி.சக்கரவர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரூர் செயலர் நா.க.அசுரன், காங்கிரஸ் நகரத் தலைவர் எஸ்.கே.குள்ளமணி, எம்எல்எப் செயலர் எஸ்.மத்தியாஸ், தாண்டவன்குப்பம் போராட்டக் குழு பி.பகத்சிங், மக்கள் அதிகார அமைப்பு குழந்தைவேல் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷை சந்தித்து மனு அளித்தனர்.
     அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நெய்வேலி சுரங்க விரிவாக்கத்துக்காக தாண்டவன்குப்பம் பகுதியை கையகப்படுத்த முயலும் என்எல்சி நிர்வாகம், அப்பகுதியினரின் வாழ்வாதாரத்துக்கான மாற்று ஏற்பாடு எதையும் செய்யவில்லை.
     சுரங்கங்களில் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்துவதால் அருகில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புகள் பாதிப்படுகின்றன. எனவே, வெடி மருந்தின் அளவை குறைக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு முடியும் வரை மந்தாரக்குப்பத்திலிருந்து நெய்வேலி நகரியத்துக்கு பழைய வழியில் தாண்டவன்குப்பும் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
     தாண்டவன்குப்பம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்கும் வரை அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது. அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
     சுரங்கம் மற்றும் தெர்மல் பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல என்எல்சி பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும்.
     பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கடந்த காலங்களைப் போல் 24 வழித்தடங்களிலும் என்எல்சி பேருந்துகளை இயக்கிட வேண்டும்.
     மந்தாரக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கெங்கைகொண்டான், மந்தாரக்குப்பம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு என்எல்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். மந்தாரக்குப்பத்தில் மீண்டும் என்எல்சி மருத்துவமனை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai