Enable Javscript for better performance
பல்கலை.யில் பருவநிலை மாற்ற கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில், பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
     சவிதா பல்கலை. துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கட்டடவியல் துறைத் தலைவர் வி.அருட்செல்வன் தலைமை வகித்தார். பொறியியல் புல முதல்வர் அந்தோணி ஜெயசேகர் வாழ்த்துரையாற்றினார். கடல்வாழ் உயிரியல் புல முதல்வர் கே.கதிரேசன், அண்ணா பல்கலை. பருவநிலை மாற்றம் ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.பழனிவேலு ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
     வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில் பேராசிரியை ஆர்.ஷீலா வரவேற்றார். பேராசிரியர் ஏ.முருகப்பன் தலைமை வகித்தார். தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத் தலைவர் அமித் பி.கேசர்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை கட்டடவியல் துறை முன்னாள் தலைவர் வி.கனகசபை வழங்கினார்.
     கல்வித் திட்ட இயக்குநர் கே.மணிவண்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் ராம.கதிரேசன், பேராசிரியர் இ.செல்வராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முன்னதாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதம் நடைபெற்றது.
     கருத்தரங்க ஏற்பாடுகளை கட்டடவியல் துறை பேராசிரியர் பழனிவேல்ராஜா, பேராசிரியர்கள் டி.ரமேஷ், பி.குமரவேல், ஷீலா, எஸ்.சங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai