Enable Javscript for better performance
பேரிடரை எதிர்கொள்ள தயாராக இருக்க அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பேரிடரை எதிர்கொள்ள தயாராக இருக்க அறிவுறுத்தல்

    By கடலூர்,  |   Published on : 15th October 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் காவல் துறை, தீயணைப்பு மீட்புப் படையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
     வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்தார்.
     கூட்டத்தில் எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள வட்டார, குறுவட்ட கிராம அளவிலான குழுக்கள் குறித்தும், இக்குழுக்கள் செயல்படும் இடங்கள், குழு உறுப்பினர்களின் பொறுப்புகள், கடமைகள் குறித்தும் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
     மேலும் இந்தக் குழுக்களோடு காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை தங்குமிடங்களுக்கு வரச் செய்தல், வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தல், மிகவும் பதற்றமான மற்றும் பதற்றமான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒத்திகை நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
     வெள்ளம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரியவந்தால் மீட்புப் பணிகளை விரைந்து உயிர்சேதமின்றி மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளில் எவ்வித தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
     கூட்டத்தில் காவல் துறை அலுவலர்கள் கடந்த ஆண்டு மழை, வெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
     கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் செ.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ச.சா.குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோ.சர்மிளா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும்
     பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai