Enable Javscript for better performance
பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
     பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தொடங்கி வைத்தார். பேரணி கடலூர் நகர அரங்கிலிருந்து புறப்பட்டு கடற்கரை சாலை, தீயணைப்பு நிலையம் அருகே நிறைவு பெற்றது. பேரணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 160 பேர் பங்கேற்று பேரிடர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
     பேரணியை தொடங்கி வைத்து ஆட்சியர் கூறியதாவது: கடலூர் மாவட்டம் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது.
     கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சுனாமி, நிஷா, தானே ஆகிய இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
     இத்தகைய பேரிடர் நிகழ்வுகளை குறைக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நிவாரணத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுகின்றன என்றார்.
     நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ச.சா.குமார், கடலூர் கோட்டாட்சியர் நா.உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் அர.அன்பழகன், வெள்ள நிவாரண வட்டாட்சியர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai