Enable Javscript for better performance
போலி மருத்துவர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி மற்றும் நடுவீரப்பட்டு பகுதியில் போலி மருத்துவர்கள் 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
     பண்ருட்டி காவல் சரகப் பகுதியில் போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிய முறையில் மருத்துவப் படிப்பு படிக்காமலும், அரசு அனுமதி, அங்கீகாரம் பெறாமலும் சிலர் பொதுமக்களுக்கு ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்ததாம்.
     இதுதொடர்பாக பண்ருட்டி அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் அன்புசெல்வி அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸ் லைன், 3ஆவது தெருவைச் சேர்ந்த நீலமேகம் (50) என்பவரை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர். இதேபோல், நடுவீரப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் ராஜகணபதி அளித்த புகாரின் பேரில் போலி மருத்துவராக செயல்பட்டு வந்ததாக பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு வடக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி (38) என்பவரை நடுவீரப்பட்டு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai