Enable Javscript for better performance
மழைக் காலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கூடாது: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    மழைக் காலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கூடாது: ஆட்சியர்

    By கடலூர்,  |   Published on : 15th October 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பருவமழைக் காலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வலியுறுத்தினார்.
     எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடலூர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மைய உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்து, வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் போதிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பில் வைக்கவும், தடையின்றி விநியோகம் செய்யவும் அறிவுறுத்தினார்.
     கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மைய உரிமையாளர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டதுடன், இந்த ஆண்டிலும் மழைக் காலத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.தங்கவேலு உள்ளிட்ட அலுவலர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai