Enable Javscript for better performance
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வாலிபர் சங்கம் துப்புரவுப் பணி- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வாலிபர் சங்கம் துப்புரவுப் பணி

    By கடலூர்,  |   Published on : 15th October 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர்.
     விருத்தாசலம் பேருந்து நிலையத்துக்கு தினமும் 100-க்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர். ஆனால், கழிப்பறைகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும், இரவு நேரத்தில் சிலர் பேருந்து நிலையத்துக்குள் சிறுநீர் கழிப்பதாலும் கடும் துர்நாற்றம் வீசியது. சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது.
     இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், இந்திய ஜனநாயக் வாலிபர் சங்கத்தினர் பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர். சங்கத்தின் வட்டச் செயலர் ஆர்.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
     வழக்குரைஞர் ஏ.சந்திரசேகரன் துப்புரவுப் பணியை தொடங்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலர் என்.எஸ்.அசோகன், நகரச் செயலர் எஸ்.சிவஞானம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
     வாலிபர் சங்கத்தின் வட்ட தலைவர் எஸ்.ராயர், துணைத் தலைவர் அமிர்தலிங்கம், நிர்வாகிகள் சிலம்பரசன், செல்வக்குமார் உள்ளிட்ட 70 பேர் பங்கேற்று தூய்மை பணி மேற்கொண்டனர்.
     பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து குப்பைகளை வாகனம் மூலம் அகற்றினர்.
     மேலும், கழிவறைகளை சுத்தம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai