Enable Javscript for better performance
விவசாய சங்க கூட்டியக்க போராட்டம்: தவாக ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று வாரியம் அமைக்கக் கோரி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் அக்.17, 18ஆம் தேதிகளில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
     அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு நிராகரித்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது.
     தற்போது நதிநீர்ப் பங்கீட்டுக்கான தேசிய கட்டமைப்பை ஏற்படுத்தும் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாகவும் மத்திய அரசு தெரிவித்து வருவது தமிழகத்துக்கு இழைக்கப்படும் மற்றொரு துரோகமாகும்.
     மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று வாரியம் அமைக்கக் கோரியும் அக்.17, 18 ஆகிய 2 நாள்கள் தமிழகம் தழுவிய தொடர் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
     இந்த தொடர் மறியல் போராட்டத்தில், தவாகவினர் முழு அளவில் பங்கேற்பர் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai