Enable Javscript for better performance
வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    


    சிதம்பரம் நகரில் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை அலுவலரின் வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     சிதம்பரம் வேங்கான்தெரு, கஜலட்சுமி குடியிருப்பில் வசிப்பவர் ராமானுஜம் (71). பொதுப்பணித் துறையில் ஓய்வுபெற்ற அலுவலர். இவரது மனைவி ராஜலட்சுமி தனது மகளை பார்க்க தஞ்சாவூர் சென்றுள்ளார்.
     இந்நிலையில் ராமானுஜம் வீட்டை பூட்டிக்கொண்டு மாடியில் உள்ள அறையில் தூங்கியுள்ளார்.
     வெள்ளிக்கிழமை காலை கீழே வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.35 ஆயிரம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai