Enable Javscript for better performance
வெலிங்டன் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வெலிங்டன் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

    By கடலூர்,  |   Published on : 15th October 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி பகுதியில் உள்ள வெலிங்டன் பாசன வாய்க்காலில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
     திட்டக்குடியை அடுத்த கீழச்செருவாயில் வெலிங்டன் நீர்த் தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து செல்லும் பிரதான வாய்கால் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
     இந்த நீர்த் தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு திட்டக்குடி, விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலை ஓரமாக பிரதான பாசன வாய்கால் உள்ளது. இதையொட்டி ஆவினங்குடி பகுதியில் பாசனத்துக்கு தண்ணீர் செல்ல சிறு வாய்க்கால் உள்ளது. இந்த சிறு வாய்க்காலை ஒட்டி சிலர் தாற்காலிக கடைகள் அமைத்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அதே பகுதியில் ஆவினங்குடியைச் சேர்ந்தவர் சிறு வணிகம் செய்ய பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்தார்.
     இது குறித்து தகவல் அறிந்த பொதுப்பணித் துறை விருத்தாசலம் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை வெலிங்டன் பிரிவு உதவி பொறியாளர் வெற்றிவேல் தலைமையிலான அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai