Enable Javscript for better performance
21இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகிற 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
     அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் தொடங்கும்.
     இதில், கடலூர் மாவட்ட விவசாயிகள், தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், காலை 8 மணி முதல் 10.15 மணிக்குள் தங்களது பெயர் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ளலாம். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai