கடலூர் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தற்போது காரீப் பருவத்துக்கான விவசாயப் பணிகள் தொடங்க வேண்டிய நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எனினும் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
இதன்படி, புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 65 மி.மீட்டர் மழை பதிவானது.
அதேபோல மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் (மில்லி மீட்டரில்): குப்பநத்தம் 28, பண்ருட்டி 26.50. விருத்தாசலம் 20, கடலூர் 19.30, ஸ்ரீமுஷ்ணம் 18, வானமாதேவி 16.80, பரங்கிப்பேட்டை 16, புவனகிரி, வேப்பூர் தலா 15, காட்டுமயிலூர் 10, சிதம்பரம், கொத்தவாச்சேரி தலா 9, கீழச்செருவாய், மேல்மாத்தூர், சேத்தியாத்தோப்பு தலா 8, அண்ணாமலை நகர் 5.60, லக்கூர் 3.40, தொழுதூர், காட்டுமன்னார்கோயில் தலா 2, லால்பேட்டை 1 மி.மீ மழை பதிவானது. எனினும், புதன்கிழமை காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.