கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடலூர் பொது
மேலாளர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.மேகநாதன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பி.மாணிக்கமூர்த்தி சிறப்புரையாற்றினார். பி.எஸ்.என்.எல். எம்பிளாயிஸ் யூனியன் மாவட்டத் தலைவர் ஏ.அண்ணாமலை, மாவட்டச் செயலர் கே.டி.சம்பந்தம், ஓய்வூதியர் சங்க மாநில சங்க சிறப்பு அலுவலர் எஸ்.முத்துகுமாரசாமி, தமிழக ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவப் படியை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், 50 சதவீத தொழிலக பஞ்சப்படியை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும், பஞ்சப்படி நிலுவையை 2007 முதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வு பெற்ற அலுவலர்கள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாவட்டச் செயலர் ஐ.எம்.மதியழகன், பொருளாளர் பி.சந்திரசேகரன், எம்பிளாயிஸ் யூனியன் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.