வடலூர் அருகே உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 எரிவாயு உருளைகளை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
வடலூரை அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் மனோகர் (45). இவர், தனது வீட்டில் உரிய அனுமதியில்லாமல் எரிவாயு உருளைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில், கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேல், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் செம்மனசெல்வி, வருவாய் ஆய்வாளர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் மனோகரன் வீட்டின் பின் பகுதியில் இருந்த கிடங்கில் சோதனை நடத்தினர். அங்கு எந்தவித உரிமமும் இன்றி பதுக்கி வைத்திருந்த 80 எரிவாயு உருளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை நெய்வேலி அருகே உள்ள தனியார் எரிவாயு உருளைக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.