நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன திருவிழாவை முன்னிட்டு, சிதம்பரம் நகரில் நான்கு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம் நிறைவேற்றியது.
சிதம்பரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவர் ஜி.தண்டபாணி தலைமை வகித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலர் ஜோதி குருவாயூரப்பன் கோரிக்கைகளை வாசித்து விளக்கமளித்தார்.
கூட்டத்தில் மாவட்ட சேவா பிரமுக் ஜெயமுரளி கோபிநாத், பஜிரங்தள் அமைப்பாளர் ஜி.குருமூர்த்தி, தர்மபிரசாத், மாநிலப் பொறுப்பாளர் கார்த்திகேயன், மாவட்டத் துணைத் தலைவர் திருநாராயணன், நகரச் சேவைப் பிரிவுப் பொறுப்பாளர் ஜி.அருள், ரமேஷ், புருஷோத்தமன், ஜெயராமன், சரவணன், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் எஸ்.முத்துக்குமரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடலூர் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோயில்களைப் பாதுகாப்பது, குடிநீர் ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வது, நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு, நான்கு வீதி சாலைகளைச் சீரமைக்க வேண்டும், நகரில் உள்ள மாமிசக் கடைகளை மூட வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், குடிநீர் தட்டுபாடின்றி வழங்க வேண்டும், பொதுமக்கள் வழங்கும் அன்னதானத்தைத் தடுக்கக் கூடாது, சிதம்பரத்தில் பசுவதை செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.