பண்ருட்டி வட்டத்துக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (மே 25) தொடங்குகிறது.
பண்ருட்டி வட்டத்துக்கான 1,426-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் மே 25-ஆம் தேதி தொடங்கி ஜூன் 6-ஆம் தேதி வரையில், சார் - ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் தலைமையில், வட்டாட்சியர் விஜய் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
மே 25 முதல் 29 வரை நெல்லிக்குப்பம் குறுவட்டத்துக்கும், மே 30 முதல் ஜூன் 1 வரை பண்ருட்டி குறுவட்டத்துக்கும், ஜூன் 2 முதல் 5 வரை காடாம்புலியூர் குறுவட்டத்துக்கும், ஜூன் 6 மருங்கூர் குறுவட்டத்துக்கும் உள்பட்ட கிராமங்களுக்கான வருவாய்த் தீர்வாயம் நடைபெறும்.
வியாழக்கிழமை (மே 25) நெல்லிக்குப்பம் குறுவட்டத்தைச் சேர்ந்த கொங்கராயனூர், சன்னியாசிப்பேட்டை, மேல்கவரப்பட்டு, பாலூர், சித்தரசூர், மேல்பாதி, கீழ்பாதி, சாத்திப்பட்டு, பலாபட்டு, சிறுநங்கைவாடி உள்ளிட்ட கிராமங்களுக்கான வருவாய்த் தீர்வாயம் நடைபெறுகிறது.
இதில், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, பட்டா மாற்றம் உள்ளிட்ட இதர நலத் திட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களாக எழுதி வருவாய்த் தீர்வாயம் நடக்கும் நாளன்று அலுவலரிடம் அளித்துப் பயன் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.