விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக் கூட்டம் கடலூர் அருகே அண்மையில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மைய ஒன்றியம் சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வரகால்பட்டில் அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தன், தனசேகர், ஜெகதீசன், கஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநிலக் கருத்தியல் பரப்புச் செயலர் சிபி.சந்தர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் ஆகியோர் கட்சியின் செயல்பாடுகள், அம்பேத்கரின் கருத்துகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறப்புரையாற்றினர்.
அமைப்புச் செயலர் தி.ச.திருமார்ப்பன், மாவட்டப் பொருளாளர் கெய்க்வாட் பாபு, மாவட்டத் துணைச் செயலர்கள் இல.திருமேனி, அஸ்கர் அலி, தொகுதிச் செயலர் மு.அறிவுடைநம்பி, மாநில நிர்வாகிகள் பெ.பாவாணன், ப.குணத்தொகையன், த.ஸ்ரீதர், மொ.வீ.சக்திவேல், தமிழருவி, சொக்கு, பா.ரா.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒன்றியப் பொருளாளர் பெருமாள்ராஜா வரவேற்க, வரக்கால்பட்டு முகாம் செயலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.