திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் என்எல்சி விளையாட்டுப் பள்ளி விடுதி மாணவர்கள் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி திண்டுக்கல்லில் கடந்த ஆகஸ்ட் 25 முதல் 28-ஆம் தேதி வரையில் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விளையாட்டுப் பள்ளி விடுதி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும், தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையால் திருவெல்வேலியில் வருகிற அக்டோபர் 9 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள பாரர் தினக் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்ரனர். மாநில அளவில் இரண்டாம் பிடித்த மாணவர்களை என்எல்சி இந்தியா நிறுவனப் பள்ளிகளின் செயலர் நெடுமாறன், விடுதித் தாளாளர் கோபாலகிருஷ்ணன், தலைமையாசிரியை தெரசா, பயிற்றுநர் குமரன், உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.