சுடச்சுட

  

  சிதம்பரத்தில் உலகத் தமிழ்க் கழகக் கிளை தொடக்க விழா, கலந்தாய்வுக் கூட்டம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
   தமிழாசிரியர் ப.செல்வம் வரவேற்றார். சிதம்பரம் கிளைத் தலைவர் கா.அரசக்கோவலன் தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட உலகத் தமிழ்க் கழக அமைப்பாளர் புலவர் கரு.நடவரசன் தொடக்கவுரையாற்றினார்.
   திருக்குறள் தொண்டூழிய பணிக்களம் நிர்வாகி புலவர் கரு.பேச்சுமுத்து வாழ்த்துரையாற்றினார். உலகத் தமிழ்க் கழகத் தலைவர் கதிர்.முத்தையன் சிறப்புரையாற்றினார்.
   விழாவில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், புலவர் ஜெயராமன், அ.பட்டாபிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புலவர் கத்தூரி ரங்கன் நன்றி கூறினார். கூட்டத்தில், சங்கத் தலைவராக கா.அரசக்கோவலன், செயலராக தில்லை ப.செல்வம், பொருளாளராக சுஜாதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai