சுடச்சுட

  

  கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

  By  கடலூர்/புதுச்சேரி,  |   Published on : 01st December 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் வியாழக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
   கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு ஒக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.
   இதன் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டானது, வியாழக்கிழமை எண் 2-ஆக ஏற்றப்பட்டது. மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்தது.
   வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்): கடலூர் 44.40, வானமாதேவி 39.80, பரங்கிப்பேட்டை 37, சிதம்பரம் 35, சேத்தியாத்தோப்பு, கீழச்செருவாய் தலா 33, வேப்பூர் 31, விருத்தாசலம் 28.40, காட்டுமன்னார் கோவில் 26, புவனகிரி 25, தொழுதூர் 24, பண்ருட்டி, லால்பேட்டை தலா 21, அண்ணாமலை நகர், ஸ்ரீமுஷ்ணம் தலா 19 மி.மீ. மழை பதிவானது.
   புதுச்சேரியில்...: புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை முதல் அவ்வப்போது பலத்த மழை பெய்தது.
   புதுச்சேரி துறைமுகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு, இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 64.7 மி.மீ. மழை பதிவானது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai