சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகுறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
   நிகழ்ச்சியில், துணைப் பேராசிரியர் பி.என்.நடராஜ் வரவேற்றார். துறைத் தலைவர் எம்.ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்துப் பேசினார். கல்வியியல் புல முதல்வர் ஆர்.பாபு பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசுகையில், டெங்கு பற்றிய புரிதல் வேண்டும் என்றார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ராஜ்குமார், தனது சிறப்புரையில் டெங்கு அறிகுறி, சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார்.
   மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.யு.சண்முகம் வாழ்த்துரை ஆற்றினார்.
   கடலூர் மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரி பாஸ்கர், டெங்கு விழிப்புணர்வு செயல் விளக்கம் அளித்தார். சமுதாய மருத்துவம் சார்ந்த டாக்டர் செந்தில்முருகன் குழுவினர், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விநாடி-வினா நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளித்தனர். நிறைவு விழாவில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. திருவள்ளுவன், பல் மருத்துவப் புல முதன்மையர் ராஜசிகாமணி ஆகியோர் பங்கேற்றனர்.
   ஏற்பாடுகளை துணைப் பேராசிரியர் எஸ்.குலசேகரப் பெருமாள் பிள்ளை, கண்ணன், எஸ்.கே.சிவசுப்ரமணியன் ஆகியோர் செய்தனர். கல்வியியல் துறையின் 136 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இவர்கள், 3 மாவட்டங்களில் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai