சுடச்சுட

    

    பண்ருட்டியில் தாயும், மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வியாழக்கிழமை 3 பேரைக் கைது செய்தனர்.
     பண்ருட்டி, சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (40). இவரது கணவர் ராஜா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். மணிமேகலை தனது மகள் ரித்தி (16) உடன் வசித்து வந்தார். ரித்தி பண்ருட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
     கணவர் மறைவை அடுத்து, மணிமேகலை வறுமையின் பிடியில் வாழ்க்கை நடத்தி வந்ததாகத் தெரிகிறது.
     இந்த நிலையில், தனது கணவருக்குரிய சொத்தின் பங்கை விற்பனை செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்கு ராஜாவின் மூத்த சகோதரர்கள் சம்மதிக்கவில்லையாம். இந்த நிலையில், மணிமேகலை, தனது மகளுடன் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
     இதுகுறித்து அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த மணிமேகலையின் அண்ணன் பெருமாள் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸார் ராஜாவின் அண்ணன்கள் ராஜ்மோகன், ராஜசேகர், ரவி ஆகியோரை கைது செய்தனர்.
     மேலும், அவரது தாயார் சரோஜா, எழில்நிலவு, பாக்கியலட்சுமி, புஷ்பா ஆகியோரை தேடி வருகின்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai