விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By சிதம்பரம், | Published on : 01st December 2017 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விவசாய ஆராய்ச்சி மையங்களை மூடும் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி.மாதவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சதானந்தம், துணைச் செயலர் மூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்கம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்.ராமச்சந்திரன், வாஞ்சிநாதன்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்லையா, புவனகிரி ஒன்றியச் செயலர் கோவிந்தராஜன், அரசு ஊழியர் சங்கம் கலியமூர்த்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சம்பா சாகுபடிக்கு மார்ச் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்கவேண்டும், கடலூர் மாவட்டத்தில் 2016-17-ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், கந்து வட்டி கொடுமையில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும், விவசாய ஆராய்ச்சி மையங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.