சுடச்சுட

  

  நெய்வேலியில் வேன் மோதியதில் இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
   காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த சக்கரபாணி மகள் கிருத்திகா (23). பொறியியல் பட்டதாரியான இவர், நெய்வேலி, வேலுடையான்பாட்டு கோயில் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது பாட்டி கஸ்தூரியுடன் பங்கேற்றார். பின்னர், கிருத்திகா அங்குள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த, நெய்வேலி என்எல்சி மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ஊழியர்களை பணிக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஒப்பந்த வேன் மோதியதில் கிருத்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
   இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai