சுடச்சுட

  

  திட்டக்குடி அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   திட்டக்குடி வட்டம், கூடலூர் ஊராட்சிக்கு உள்பட்டது புதுகாலனி. இங்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 75 பேருக்கு அரசால் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு அந்த இடத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். மிதமான அளவில் மழை பெய்தாலும் வீதிகள் சேறும், சகதியுமாக மாறிவிடுவதாக புகார் கூறினர். வீதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதாம். இந்தப் பகுதியில் சாலைகளை சீரமைத்துத் தரக் கோரி விருத்தாச்சலம் கோட்டாட்சியர், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
   இதனால் அதிருப்தியடைந்த கூடலூர் கிராம மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி வட்டாட்சியர் சிவக்குமார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
   வருகிற, 5-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என அவர் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
   மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai