சுடச்சுட

  

  கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் கே.முருகுமணி, விவசாயப் பிரிவு செயலர் கே.காசிநாதன், தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், பேரவைச் செயலர் பி.ரவிச்சந்திரன், எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் இரா.வெ.பெருமாள்ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
   எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன், மருத்துவப் பிரிவு துணைச் செயலர் கே.சீனுவாசராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார், கடலூர் நகரச் செயலர் ஆர்.குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
   கூட்டத்தில், இரட்டை இலைச் சின்னம் மீண்டும் அதிமுகவுக்கு கிடைத்தது கட்சியினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதற்கு பாடுபட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அவைத் தலைவர் இ.மதுசூதனனின் வெற்றிக்கு கடலூர் மாவட்டத்திலிருந்து சென்று தேர்தல் பணியாற்றுவது. மாவட்டத்தில் இயற்கை பேரிடர்களை சமாளித்திடும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்துவரும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்துடன் கட்சியினர் இணைந்து பணியாற்றுவது.
   கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி (டிச.5) ,ஒவ்வொரு கட்சியினரும் அவரவர் வீட்டின் முன் ஜெயலலிதா உருவப்படம் வைத்து மலர் அஞ்சலி செய்து தீபம் ஏற்றி, அன்னதானம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கூட்டத்தில், ஒன்றியச் செயலர் ஜெ.முத்துகுமாரசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் பி.ரவிச்சந்திரன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai