சுடச்சுட

  

  கடந்த 2016-17-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து ஆசிரியர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டிப் பேசினார்.
   இதில், பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற 31 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 951 ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டப்பட்டனர். அப்போது ஆட்சியர் பேசியதாவது: கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தபோதும், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai