சுடச்சுட

  

  இசைத் துறை சான்றிதழ் படிப்பு: அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

  By  சிதம்பரம்,  |   Published on : 02nd December 2017 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், சென்னை நாதபிரும்மம் நிறுவனமும் இணைந்து இசைத் துறை சான்றிதழ் படிப்புகளை தொடங்குவதற்கான கல்வி பரிமாற்ற ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
   பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மணியன் முன்னிலையில் பதிவாளர் கே.ஆறுமுகம், நாதபிரும்மம் நிறுவனர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மாற்றிக் கொண்டனர்.
   இசைத் துறை சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை (வீணை, வயலின், புல்லாங்குழல், நாகஸ்வரம், கீ-போர்டு) தொடங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
   நிகழ்ச்சியில் நாதபிரும்மம் நிறுவன இயக்குநர் மீனாட்சி சுப்பிரமணியன், கலைப்புல முதல்வர் முத்துராமன், கல்வி வளர்ச்சி இயக்குநர் கே.மணிவண்ணன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எம்.அருள் ஆகியோர் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai