உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கம்
By கடலூர், | Published on : 02nd December 2017 09:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு, கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.ஹபீசா தலைமை வகித்தார். நிலைய மருத்துவ அலுவலர் அ.சண்முகக்கனி முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி என்.சுந்தரம் கருத்துரை வழங்க, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் தேவ்ஆனந்த் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.
புனித வளனார் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சந்தானராஜ், திட்ட அலுவலர் அன்னம்மாள், சீஷா நிறுவன மேலாளர் ஸ்ரீதர், மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் சங்கத் தலைவர் ச.ராஜேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதையடுத்து, சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியை அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் ஏற்றனர் .