சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி மெடிக்கல் சர்ஜிக்கல் பிரிவு, இரண்டாம் ஆண்டு இளநிலை செவிலியர் மாணவ, மாணவிகள் சார்பில், ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கண்காட்சி ராஜா முத்தையா மருத்துவமனையில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
   உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கண்காட்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். பதிவாளர் கே.ஆறுமுகம் பங்கேற்றார். கண்காட்சி ஏற்பாடுகளை துணைவேந்தரின் ஆலோசகரும், மருத்துவ விரிவாக்கத் துறை மற்றும் இருதய நோய் பிரிவு தலைவருமான என்.சிதம்பரம், மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.யு.சண்முகம், செவிலியர் கல்லூரி முதல்வர் டி.கரோலின் ராஜ்குமார், துணை முதல்வர் எம்.காந்திமதி, இணைப் பேராசிரியர் பி.சாரா, விரிவுரையாளர் பி.சிவகாமி, என்.காயத்ரி ஆகியோர் செய்தனர்.
   ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரிப் பேராசிரியர்கள் எஸ்.கலாவதி, எஸ்.கமலா, எஸ்.ஜெயலெட்சுமி, கே.லதா, எஸ்.லட்சுமி, வி.கிரிஸ்டினால், கே.வனஜா ஆகியோர் பங்கேற்றனர். இரண்டாம் ஆண்டு நர்சிங் மாணவ, மாணவிகள், கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai