Enable Javscript for better performance
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

    By  நெய்வேலி  |   Published on : 02nd December 2017 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் மூலம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கும். இந்த ஆறு, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையில் தொடங்கி, கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை வழியாக கடந்து செல்கிறது.
     பெரும்பாலான காலங்களில் இந்த ஆறு வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. பெருமழைக் காலத்தில் மட்டும் ஓரிரு நாள்கள் மட்டுமே ஆற்றில் தண்ணீர் செல்லும்.
     இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
     இதனால், ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
     இந்த மழைநீர் விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரை கடந்து, கடலூர் மாவட்ட எல்லையான சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai