Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே மணல் கடத்தியதாக 11 மாட்டு வண்டிகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை கருக்கை கெடிலம் நதி அருகே காவல் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததாக எலவத்தடி சீனுவாசன் (44), தோப்புக்கொல்லை சடையாண்டி (34), சங்கர் (51), கருக்கை சதீஷ் (21), மருங்கூர் தனவேல் (50), ஆறுமுகம் (53), மேலிருப்பு மூர்த்தி (64), ராஜசேகர் (45), சக்கரபாணி (50), சேகர் (40), செல்வகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களது மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai