சுடச்சுட

    

    பேர்பெரியான்குப்பம் பள்ளி மாணவிகளுடன் இணைந்து நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் மரக் கன்றுகளை நட்டார்.
     நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது பேர்பெரியான்குப்பம். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
     இந்தப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றியல் நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க மாணவிகள் விருப்பம் தெரிவித்தனர்.
     அதன் பேரில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், தனது சொந்த செலவில் 300 மரக்கன்றுகளை வாங்கி வந்து, பள்ளி அருகே உள்ள குளம், சாலை ஓரங்களில் மாணவிகளுடன் சேர்ந்து நட்டார். மாவட்ட விவசாய அமைப்பாளர் ஞானமணி, ஊராட்சி செயலர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai